படத்தின் மேல் அழுத்துங்கள். ஆங்கிலம்.காம் செல்லுங்கள் எளிதாக ஆங்கில இலக்கணம் பயிலுங்கள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

Saturday 19 September 2009

ஆங்கில இலக்கணம் பயில்வோம்


ஆங்கிலத்தின் மொத்த 26 எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள் - 5, மெய் எழுத்துக்கள் - 21 ஆகும்.உயிர் எழுத்துக்கள் Vowels Sounda e i o u = 5மெய் எழுத்துக்கள் Consonant Soundb c d f g h j k l m n p q r s t v w x y z = 21பொதுவாக ஆங்கிலத்தில் ஒரு/ஓர் என்பதைக் குறிக்க பெயர் சொல்லுக்கு முன்பாக ‘a’ பயன்படுத்தப் படுகின்றது. சில இடங்களில் ‘an’ என்றும் பயன்படுத்தப் படுகின்றது. இதில் "a" பயன்படுத்தும் இடங்கள் எவை? "an" பயன்பத்தும் இடங்கள் எவை? என்பதைப் பார்ப்போம்.பொதுவாக மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர்ச் சொல்லுக்கு முன்னால் "a" பயன்படுத்துகின்றது.உதாரணமாக:I am a Sri Lankanநான் ஒரு இலங்கையன்.I am a student.நான் ஒரு மாணவன்.This is a carஇது ஒரு மகிழூந்து.This is a book.இது ஒரு புத்தகம்.He is a teacher.அவர் ஒரு ஆசிரியர்.பொதுவாக a, e, i, o, u போன்ற உயிர் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் சொற்களுக்கு முன்னால் ஓர்/ஒரு என்பதைக் குறிக்க "an" பயன்படுத்தப் படுகின்றது.உதாரணம்:This is an animal - (animal begins with a vowel sound)இது ஒரு மிருகம்.I am an Indianநான் ஒரு இந்தியன்.I am an English teacherநான் ஒரு ஆங்கில அசிரியர்.He is an old manஅவர் ஒரு வயதான(வர்) மனிதர்.கவனிக்கவும்மேற் கூறிய விதிமுறைகள் மாறுப்படும் இடங்களும் உள்ளன. கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.உயிர் எழுத்துக்களான a, e, i, o, u போன்ற பெயர் சொல் முன்னால் வந்தாலும் ‘a’ வாகவே பயன்படுபவைகள்.a user - யூசர் என்பதன் சத்தம் ‘உ” சத்தமாக இல்லாமல் “யு” வாக ஒலிப்பதால் ‘a’ பயன்படுத்தப் படுகிறது. (sounds like 'yoo-zer,' i.e. begins with a consonant 'y' sound, so 'a' is used)a university - இதன் சத்தமும் “உ” சத்தமாக இல்லாமல் “யு” என்றே ஒலிப்பதை அவதானியுங்கள்.a European country – இதிலும் ‘இ’ சத்தமாக இல்லாமல் ‘யு’ போன்று ஒலிப்பதே அதற்கான காரணம். (sounds like 'yer-o-pi-an,' i.e. begins with consonant 'y' sound)மெய் எழுத்து முன்னால் வந்தும் ‘an’ பயன்படும் இடங்கள். an hour - என்பதில் “hour” என்பது “our” போல் “அ” உயிர் எழுத்தின் சத்தமாக ஒலிப்பதால் இவ்வாறு “an” பயன்படுத்தப்படுகின்றது. (sounds like 'a-our,' begins with vowels 'a' sound)an honour - இதுவும் “அ’ உயிர் எழுத்தின் சத்தமாகவே ஒலிக்கிறது.இதற்கான காரணம் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கப்படாமல், உயிர் எழுத்துக்களாக ஒலிப்பவைகள், மெய் எழுத்துக்களாக ஒலிப்பவைகள் என உச்சரிப்புக்கு அமையவே இவ்வாறு பயன்படுத்தப் படுகின்றதாம்.இது போன்ற பயன்பாடுகளின் பொழுது ஆங்கிலேயர்களும் பிழை விட்டுவிடும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.இவற்றை நாம் கவனமாக அவதானித்துக் கற்பது மிகவும் பிரயோசனமானதாக இருக்கும்.மேலும் துணுக்குகள் நீங்கள் இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். பின் இலக்க வரிசை கிரமத்தில் மற்றப் பாடங்களை தொடருங்கள். அதுவே இந்த ஆங்கிலப் பயிற்சி நெறியை தொடர மிகவும் எளிதானதாக இருக்கும்.நன்றி

எங்களுடைய இணையத்தளத்தில் புதிய ஆங்கில இலக்கணம் இன்னும் வரும். இந்த இணையத்தளத்தை புக்மாக் பன்னிக்கொள்ளுங்க

No comments:

Post a Comment